UPDATED : நவ 06, 2026 07:18 PM
ADDED : நவ 05, 2026 09:29 PM
சென்னை: ‘திருவள்ளுவர் விருது உட்பட 10 விருதுகள் பெற, தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்’ என, தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. வரும், 2027ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது, 2026ம் ஆண்டுக்கான பாரதியார் விருது, பாரதிதாசன் விருது, திரு.வி.க., விருது, கி.ஆ.பெ.விசுவநாதம் விருது, காமராஜர் விருது, அண்ணாதுரை விருது, கருணாநிதி விருது, காயிதே மில்லத் விருது ஆகியவற்றுக்கு, தமிழறிஞர்கள் வரும் டிச., 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ‘https://tamilvalarchithurai.tn.gov.in’ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விருதாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட உள்ளன.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
