திருவண்ணாமலை ஆக்கிரமிப்பு கட்டடங்கள்: அரசு அறிக்கை தர உத்தரவு
திருவண்ணாமலை ஆக்கிரமிப்பு கட்டடங்கள்: அரசு அறிக்கை தர உத்தரவு
UPDATED : ஜூலை 16, 2024 09:04 PM
ADDED : ஜூலை 16, 2024 08:59 PM

சென்னை: திருவண்ணாமலை மலையே சிவன் தான் , அங்கு கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்-களும் கட்ட எப்படி அனுமதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் திருவண்ணாமலை கோயிலில் எந்தவித அனுமதியின்றி கட்டடங்கள், குடிநீர் இணைப்புகள் , கழிப்பிடங்கள், கட்டப்பட்டுள்ளன. இதற்கு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்துள்ளனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மலைப்பகுதி லே அவுட் ஆகிவிடும் அபாயம் உள்ளது,
மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கை விசாரித்த இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, திருவண்ணாமலை மலையே சிவன் தான் எனவும், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்-களும் கட்ட அனுமதிக்கலாம் . கிரிவல பாதையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

