''இந்த வண்டி தான் டில்லி செல்லும்'': அண்ணாமலை பேச்சு
''இந்த வண்டி தான் டில்லி செல்லும்'': அண்ணாமலை பேச்சு
UPDATED : ஏப் 01, 2024 04:00 PM
ADDED : ஏப் 01, 2024 01:48 PM

கோவை: ''மற்ற கட்சிகள் எத்தனையோ வண்டியில் பிரசாம் செய்ய வரலாம்; ஆனால் நான் வந்திருக்கும் இந்த வண்டி தான் டில்லி போகின்ற வண்டி'' என கோவையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
கோவை லோக்சபா தொகுதியில் பா.ஜ., சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதற்காக கோவை வடக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பி.என்.புதூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டபோது அண்ணாமலை பேசியதாவது:
இந்த சரித்திர தேர்தலில் பிரதமர் மோடியை 3வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர செய்ய வேண்டும். இதுவே 10 ஆண்டுகளாக அவரின் உழைப்பிற்கு நாம் அளிக்கப்போகும் ஊதியம். உங்கள் வீட்டு பிள்ளையான இந்த அண்ணாமலைக்கு ஏப்.,19ல் நீங்கள் ஆதரவளிப்பீர்கள் என நம்புகிறேன். மற்ற கட்சிகள் எத்தனையோ வண்டியில் பிரசாரம் செய்ய வரலாம்; ஆனால் நான் வந்திருக்கும் இந்த ஒரு வண்டிதான் டில்லி போகின்ற வண்டி. மற்றவைகள் எல்லாம் எங்கே போவது என யோசித்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

