sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/இந்த தேர்தல் சுவாரஸ்யமா இருக்கும்

இந்த தேர்தல் சுவாரஸ்யமா இருக்கும்

இந்த தேர்தல் சுவாரஸ்யமா இருக்கும்


ADDED : ஏப் 01, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 12:56 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்த தேர்தல் சுவாரஸ்யமா இருக்கும்


கே ப்டன் விஜயகாந்த் இருந்தபோதில் இருந்தே அவரது ஆதரவாளர் நான். என் ஆதரவு தே.மு.தி.க.,வுக்கு தான்.

விஜயகாந்த் இருந்தவரை தி.மு.க.,வை கடுமையாக எதிர்த்தார். இப்போ அவங்களோடயே கூட்டணி அமைச்சது அதிர்ச்சியா இருக்கு. கட்சி நிர்வாகிகளே எதிர்ப்பு. தி.மு.க.,வோட சேர்ந்திருக்க கூடாதுங்கறது என் தனிப்பட்ட கருத்து.

மேற்காசிய போர் நடக்குற இந்த நேரத்துல, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு இல்லாத வகையில மத்திய அரசு சிறப்பா செயல்படுது. ஒருவழியா விஜய் அரசியலுக்கு வந்துட்டார். ஜெயிச்சாதான் தெரியும் மக்களுக்கு நல்லது செய்றாரா அல்லது வழக்கமான அரசியல்வாதியா இவரும் இருக்காரான்னு.

மகளிர், ரசிகர்கள் அனைவரும் அவருக்கு தான் ஓட்டு போடுவர். தி ராவிட கட்சிகளுக்கான ஓட்டு கணிசமா விஜய்க்கு கிடைக்கும். அதுவும், தி.மு.க.,வுக்கு தான் அதிக பாதிப்ப ஏற்படுத்தும். அதனால, இந்த தேர்தல் களம் சுவாரஸ்யமா இருக்கும்.

தேர்தலுக்கு முன் வீடு தேடி ஓட்டு கேக்குறாங்க. ஜெயிச்சதுக்கு அப்புறம், நாமதான் அவங்க பின்னாடி போக வேண்டியதா இருக்கு. ஜெயிச்சிட்டா குணம் மாறிடும் போல. புதுசா வரவங்க ஜெயிச்சு நல்லது செய்தால் செய்யட்டும். மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.

சூர்யபெருமாள், 24 திருமங்கலம், மதுரை

நடிகர் விஜய் எதிர்க்கட்சி தலைவராக இருக்கட்டுமே...!


நா ன், அ.தி.மு.க.,வுக்கு இரண்டாவது முறையாக ஓட்டு போட இருக்கிறேன். கொங்கு மண்டல விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்தை, முதல்வராக இருந்த பழனிசாமி தான் கொண்டு வந்தார்.

அத்திட்டத்தால், நிறைய விளைநிலங்கள் நீர்வளம் பெற்றுள்ளன. விவசாயத்திற்கு அவர் ஆதரவாக உள்ளார்.

அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அம்மா மருந்தகம், அம்மா உணவகம் போன்ற திட்டங்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

அதேநேரம், அரசியல் கட்சிகளின் இலவச அறிவிப்புகள் ஏற்புடையதல்ல; இலவசங்களால் மக்கள் சோம்பேறிகளாக தான் மாறுகின்றனர். அ.தி.முக., ஆட்சிக்கு வந்தால் தான், மத்திய அரசின் நல்ல திட்டங்களை பெற முடியும்.

நடிகர் விஜய் கட்சி துவங்கியதும், அரசியலுக்குள் நுழைந்ததும் தவறில்லை; இம்முறை அவர், எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் அடுத்த முறை முதல்வர் வாய்ப்பு வழங்கலாம்.

எம்.மாலதி, 23 திருப்பூர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us