இங்க தான் ரேட்டு கம்மி அங்க கறந்துடுவாங்க! பிரேக் இன்ஸ்., பேச்சால் ஆபீசுக்கு அதிகாரி 'பிரேக்'
இங்க தான் ரேட்டு கம்மி அங்க கறந்துடுவாங்க! பிரேக் இன்ஸ்., பேச்சால் ஆபீசுக்கு அதிகாரி 'பிரேக்'
ADDED : பிப் 21, 2025 07:09 AM

திருநெல்வேலி: வள்ளியூர் பிரேக் இன்ஸ்பெக்டரின் லஞ்ச பேரம் குறித்த ஆடியோவில், 'இங்க தான் ரேட்டு கம்மி; அங்க கறந்துடுவாங்க' என திருநெல்வேலி இன்ஸ்பெக்டர் பற்றிய சர்ச்சை பேச்சால், விஜிலென்ஸ் ரெய்டு பயம் தொற்றிக் கொள்ள, நேற்று அலுவலகம் வழக்கமான பரபரப்பின்றி வெறிச் சோடியது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் போக்குவரத்து பிரேக் இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில், புதிய கார் பதிவெண் பெற்ற சுரேஷ் பாக்கியம் என்பவரிடம், வள்ளியூர் பிரேக் இன்ஸ்பெக்டர் பெருமாள், 20,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். சுரேஷ் பாக்கியம், வள்ளியூர் டவுன் பஞ்., 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் தி.மு.க., கவுன்சிலரின் கணவரிடமே கறாராக லஞ்சம் கேட்ட பிரேக் இன்ஸ்பெக்டருக்கு பாடம் கற்பிக்க, சுரேஷ் பாக்கியம் முடிவு செய்தார்.
இதற்காக, 10,000 ரூபாயை பிரேக் இன்ஸ்பெக்டருக்கு கூகுள் பேவில் அனுப்பினார். பின், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்து, அவரை கையும், களவுமாக பிடித்து தர திட்டமிட்டார்.
ஆனால், பிரேக் இன்ஸ்பெக்டர் பெருமாள், லஞ்ச ஒழிப்பு போலீசாரை கண்டதும் காம்பவுண்டு சுவர் தாவி குதித்து, 'பிரேக் பிடிக்காமல்' ஓட்டம் பிடித்துள்ளார்.
தொடர்ந்து, சில தினங்கள் மருத்துவ விடுப்பில் சென்றார். இதற்கிடையே, பிரேக் இன்ஸ்பெக்டர் பெருமாள், ஒரு புரோக் கரிடம் பேசும் ஆடியோ வெளியானது. அதில், 'இங்க தான் ரேட் கம்மி. 20,000 தான் வாங்குறேன். அதுவும் நீ சொல்றனு தான்.
'இதையே திருநெல்வேலி இன்ஸ்பெக்டரிடம் போய் கேட்டுப்பார். 50 ஆயிரம் கேட்பார். ஆனால், என்னை போல அதிகம் பேச மாட் டார்' என, பேச்சு இடம் பெற்றுள்ளது. மேலும், '40 லட்சம் ரூபாய் செலவு செய்து கார் வாங்குவாராம்... ஒரு இரு பதாயிரம் ரூபாய் தர
மாட்டானா... இவன் புகார் பண்ணா என் மேல ஒரு வழக்கு தானே வரும்; பார்த்துக்கிறேன்' என பேசிய மற்றொரு ஆடியோவும் வெளிவந்தது.
இந்த இரண்டு ஆடியோக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதில், திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் குறித்த பெரு மாளின் பேச்சால், திருநெல்வேலி ஆபீசிலும் எந்நேரமும் ரெய்டு நடக் கலாம் என்ற பதற்றம் நிலவியது. இதனால், பணியில் இருந்த ஒரே ஒரு இன்ஸ்பெக்டரும் நேற்று பணிக்கு வராததால், புதிய வாகன பதிவுகள், லைசென்ஸ், பெயர் மாற்றம், என நுாற்றுக்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட பணிகள் எதுவும் நேற்று நடக்கவில்லை.
பலரும் காத்திருந்து சென்றனர்.
வட்டார போக்குவரத்து அலுவலகமே வெறிச்சோடியது. பிரேக் இன்ஸ்பெக்டர் பெருமாள் கூறியது போல, எப்போதும் லஞ்ச புழக்கத்தில் இருக்கும் திருநெல்வேலி அலுவலகம் நேற்று பரபரப்பின்றி காணப்பட்டது. விசாரித்தபோது, நேற்று பணியில் இருக்க வேண்டிய இன்ஸ்பெக்டர் கோர்ட் பணிக்காக வெளி யூர் சென்றதாக, அங்குள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.