ADDED : மே 17, 2025 07:27 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (மே 16) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
15 வயது சிறுமிக்கு குழந்தை
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, 15 வயது சிறுமி, தேவங்குடியில், பெரியம்மா வீட்டில் வசித்தார். அப்போது, அதே பகுதியில் வசிக்கும் ராஜ்குமார், 25, என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, ராஜ்குமார் அவரிடம் தவறாக நடந்துள்ளார். கர்ப்பமடைந்த சிறுமிக்கு நேற்று முன்தினம், திருவாரூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
சிறுமி புகாரின்படி, மன்னார்குடி மகளிர் போலீசார், ராஜ்குமார் மீது போக்சோவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கொத்தனாருக்கு 'காப்பு'
வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி சுதாகர், 27. இவருக்கும், உறவினர் மகளான வேலுாரை சேர்ந்த, 9ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமிக்கும் கடந்த ஆண்டு பழக்கம் ஏற்பட்டது.
கடந்தாண்டு செப்டம்பரில் வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் இருந்த சுதாகரையும், சிறுமியையும் நேற்று போலீசார் மீட்டனர்.
இதில், சிறுமியை சுதாகர் திருமணம் செய்து கொண்டதும், தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. போலீசார் போக்சோவில் சுதாகரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தொழில் அதிபர் மீது போக்சோ வழக்கு
பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் 17வயது சிறுமி. சிறுமியின் தந்தை பொள்ளாச்சியில் கயிறு ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் அருண்குமார் என்பவரிடம் பணியாற்றி வந்தார். அந்த நிறுவனத்துக்கு தந்தையுடன், சிறுமியும் வேலைக்கு சென்றுள்ளார்.
அந்தநிறுவன உரிமையாளர் அருண்குமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தொழில் அதிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.