ADDED : மார் 02, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அழகிரியால் நீக்கப்பட்ட மூன்று நிர்வாகிகள் மீண்டும் காங்கிரசில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை:
கடலுார் தெற்கு மாவட்ட காங்., முன்னாள் தலைவர் விஜயசுந்தரம், கடலுார் வடக்கு மாவட்ட மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் சிவக்குமார், துாத்துக்குடி மாவட்டம் தண்டுபத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா ஆகியோர் பல்வேறு காரணங்களுக்காக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நடவடிக்கைகளை ரத்து செய்து, மீண்டும் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து பணியாற்றிட அனுமதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

