தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பஹ்ரைனில் தவித்தவர்கள் தமிழகம் திரும்பினர்

 பஹ்ரைனில் தவித்தவர்கள் தமிழகம் திரும்பினர்

 பஹ்ரைனில் தவித்தவர்கள் தமிழகம் திரும்பினர்


ADDED : மார் 20, 2026 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக, கடந்த பிப்., 28ம் தேதியில் இருந்து, ஐக்கிய அரபு நாடுகள், வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் இடையே, விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. பஹ்ரைன் நாட்டில் உள்ள தமிழர்கள், இந்தியா திரும்ப முடியாமல் தவித்தனர்.

இதையடுத்து, பஹ்ரை னில் உள்ள தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்கள், அவர்களை பாதுகாப்பாக, தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதையடுத்து பயணியர், பஹ்ரைனில் இருந்து, சாலை மார்க்கமாக, சவுதி அரேபியா நாட்டின் தமாம் நகருக்கு சென்றனர்.

அங்கிருந்து சிறப்பு விமானத்தில், 192 பேர் நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us