ADDED : மே 26, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
சென்னை: கூடுதல் டி.ஜி.பி.,க் கள் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்:
மாநில சட்டம் -- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரியும் மகேஷ்வர் தயாள், காவல் துறையின் நிர்வாகப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கூடுதல் டி.ஜி.பி., அன்பு, மாநில சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கும்; அருண், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கான அரசாணையை, உள்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.
