UPDATED : நவ 15, 2026 07:17 PM
ADDED : நவ 15, 2026 07:14 PM
தர்மபுரி: சிறையில் அடாவடி செய்த, கைதிகள் மூவர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.
தர்மபுரி மாவட்ட சிறையில், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கவுதம், 26, சண்முகம், 22, சதீஷ், 23. இவர்கள் மூவரும், ஒரு வழக்கில் கைதாகி, அடைக்கப்பட்டிருந்தனர்.
நவ., 13ம் தேதி காலை, 11:20 மணிக்கு, மூவரும் சிறையில் உள்ள ‘டியூப் லைட்’டை உடைத்து, அதன் கண்ணாடி துண்டுகளால் கைகளில் கிழித்து, காயப்படுத்தி கொண்டனர். தடுக்க வந்த சிறை காவலரையும் தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த கைதிகள் மூவருக்கும், சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து, பணி செய்ய விடாமல் இடையூறு செய்ததாக, தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனில், சிறை கண்காணிப்பாளர் சிவபெருமாள் புகாரளித்தார். போலீசார், கவுதம் உட்பட, மூவர் மீதும் வழக்கு பதிந்தனர்.
