ADDED : ஏப் 02, 2025 02:20 AM
மேட்டூர்,:சேலம் மாவட்டம், மேச்சேரி போலீசார், தொப்பூர் பிரிவு அருகே கம்மம்பட்டியில், நேற்று மதியம், 3:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பெங்களூருவில் இருந்து மேச்சேரி நோக்கி வந்த, 'கியா' காரை நிறுத்த முயன்றனர்.
கார் நிற்காமல் சென்றதால், வெள்ளாறு அடுத்த தெத்திகிரிபட்டி அருகே, எஸ்.எஸ்.ஐ., கோவிந்தராஜ், காரை நிறுத்த முயன்றார். அவரை இடித்துவிட்டு கார் சென்றதால் கோவிந்தராஜ் காயமடைந்தார்.
மேச்சேரி எஸ்.ஐ., சுதாகர், எம்.காளிப்பட்டி அருகே காரை மறித்து பிடித்து சோதனை செய்தார். காரில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.
விசாரணையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பேஜாராம், 33, தேவாராம், 24, மேச்சேரி, அமரத்தானுார் சாமிநாதன், 35, என்பதும், காரில் புகையிலை கடத்தி வந்ததும் தெரிந்தது.
சாமிநாதன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில், புகையிலை பாக்கெட்டுகள், பணம் எண்ணும் இயந்திரம், 3 லட்சம் ரூபாய் இருந்தது. மூன்று பேர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

