sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மூன்று கோடி வீடுகளில் விரைவில் 'ஸ்மார்ட் மீட்டர்'

/

மூன்று கோடி வீடுகளில் விரைவில் 'ஸ்மார்ட் மீட்டர்'

மூன்று கோடி வீடுகளில் விரைவில் 'ஸ்மார்ட் மீட்டர்'

மூன்று கோடி வீடுகளில் விரைவில் 'ஸ்மார்ட் மீட்டர்'


UPDATED : ஏப் 04, 2023 07:57 AM

ADDED : ஏப் 04, 2023 07:55 AM

Google News

UPDATED : ஏப் 04, 2023 07:57 AM ADDED : ஏப் 04, 2023 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கெடுக்க, 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்திற்கு, மின்வாரியத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

Image 3284621


தமிழக மின் வாரிய ஊழியர்கள், வீடுகளுக்கு இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் சென்று, மீட்டரில் பதிவான மின்சார அளவை பார்த்து, மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர். சிலர் தாமதமாக கணக்கெடுப்பதால், குறைந்த மின்சாரம் பயன்படுத்துவோரும், அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது.

சில ஊழியர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் பணம் பெற்று, அதிக மின்சாரத்தை குறைத்து கணக்கு எடுக்கின்றனர். இதனால், மின் வாரியத்திற்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, ஆளில்லாமல் துல்லியமாக கணக்கெடுக்கும், 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மீட்டரில் தகவல் தொடர்பு சாதனம் பொருத்தி, அலுவலக, 'சர்வர்' உடன் இணைக்கப்படும்.

கணக்கெடுக்கும் தேதி மென்பொருளாக பதிவேற்றம் செய்யப்படும் என்பதால், அந்த தேதி வந்ததும் தானாகவே கணக்கெடுத்து, நுகர்வோரின் மொபைல் போன் எண்ணுக்கு மின் பயன்பாடு, கட்டணம் குறித்த எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படும்.

சோதனை முயற்சியாக, சென்னை தி.நகரில், 1.42 லட்சம் மின் இணைப்புகளில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டு, கணக்கு எடுக்கப்படுகிறது. இத்திட்டத்தை மாநிலம் முழுதும் விரிவுபடுத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Image 1093017


மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதுடன், தகவல் பரிமாற்றம், ஒருங்கிணைப்பு, பராமரிப்பது ஆகிய பணிகளை, தனியார் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. 1 மீட்டருக்கு அதிகபட்சம், 6,000 ரூபாய் வரை செலவிட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை விட குறைந்த செலவில், தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.

இதற்காக, நுகர்வோரிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. விரைவில் ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்ய டெண்டர் கோரப்படும். 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us