பர்கூர் அருகே மூன்று வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி
பர்கூர் அருகே மூன்று வாகனங்கள் மோதி விபத்து: 3 பேர் பலி
ADDED : ஜன 26, 2025 07:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே லாரி, பிக்கப் வேன், மாட்டு வண்டி மோதிய விபத்தில் 3 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே லாரி பிக்கப் வேன், மாட்டு வண்டி உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
இன்று அதிகாலை 5:45 மணிக்கு பர்கூர் அடுத்த அத்திப்பள்ளம் அருகே சென்ற போது மாட்டு வண்டியை, லாரி முந்த முயன்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்தவர்களின் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.