போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
போலீஸ் வாகனம் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
ADDED : நவ 11, 2025 10:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: திருப்புவனம் அருகே போலீஸ் வாகனம் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சக்குடி அருகே போலீஸ் வாகனம் மோதியது. இதில் பிரசாத்(25), மனைவி சத்யா(20), குழந்தை அஸ்வின் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்பி சிவபிரசாத் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

