தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/பணத்திற்காக நண்பரை கொன்ற மூவர் கைது

பணத்திற்காக நண்பரை கொன்ற மூவர் கைது

பணத்திற்காக நண்பரை கொன்ற மூவர் கைது


UPDATED : அக் 24, 2026 08:59 PM

ADDED : அக் 24, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 08:59 PM ADDED : அக் 24, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாலாஜா: வாலாஜா அருகே, வாலிபரை கொலை செய்த நண்பர்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த வி.சி., மோட்டூரை சேர்ந்தவர் ஜீவா,40. கடந்த 21 ம் தேதி, இவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்து வன்னிவேடு, சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சடலத்தை வீசி சென்றது.

வாலாஜா போலீசார் வழக்கு பதிந்து, தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் வாலாஜா சுங்க சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆட்டோவில் சந்தேகத்துகிடமாக வந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் வாலாஜாவை சேர்ந்த ரபீக்,34, அமீன்பாஷா,42, சென்னை பட்டாபிராமை சேர்ந்த நிஜந்தன்,25, என்பதும், ஜூவாவை மூவரும் சேர்ந்து கொலை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், ரபீக், ஜீவா இருவரும் நண்பர்கள். 3 சவரன் தங்க நகையை வாங்கி கொண்டு அதனை திருப்பி கொடுக்காமல் ஜூவா அலைக்கழித்து வந்ததுள்ளார். அதேபோல ஆட்டோ டிரைவரான அமீன் பாஷாவிடம் ஜீவா சிறுக சிறுக 1.5 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று கொண்டு திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஏற்பட்ட விரோதத்தால் நண்பனான ஜீவாவை, திட்டமிட்டு சென்னை பட்டாபிராமை சேர்ந்த தக்காளி வியாபாரியான நிஜந்தனின் உதவியோடு கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us