தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இ–நாமில் மஞ்சள், கொப்பரை ஏலத்தில் சிக்கல் வியாபாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பு

இ–நாமில் மஞ்சள், கொப்பரை ஏலத்தில் சிக்கல் வியாபாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பு

இ–நாமில் மஞ்சள், கொப்பரை ஏலத்தில் சிக்கல் வியாபாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பு


UPDATED : அக் 24, 2026 08:59 PM

ADDED : அக் 24, 2026 08:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 08:59 PM ADDED : அக் 24, 2026 08:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: இ–நாம் எனப்படும், மின்னணு தேசிய வேளாண் சந்தை முறையில், தேசிய வேளாண் விளை பொருள் சந்தைகளை இணைக்கும் ஏல விற்பனை நடக்கிறது. இ–நாமில் ஏலத்துக்கு வைக்கப்படும் மஞ்சள், கொப்பரை தேங்காய் உட்பட அனைத்து பொருளுக்குமான தரம், நீளம், அகலம், தடிமன், மஞ்சளில் குர்குமின், கொப்பரையில் எண்ணெய் பதம் போன்றவையும் குறிப்பிடப்படும்.

ஆனால் போர்ட்டல், சர்வரில் பல்வேறு பிரச்னை உள்ளதாக கூறி, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில், விளை பொருள் ஏலத்தில் பங்கேற்காமல் வியாபாரிகள் புறக்கணித்துள்ளனர்.

இதுபற்றி, அவர்கள் கூறியதாவது:

இ–நாம் சர்வர் ‘ஸ்லோ’வாக இருப்பதால், ஏலம் குறிக்க முடியவில்லை. வங்கி கணக்கில் செலுத்தும் பணம், எங்கு சென்றது என அறிய முடியவில்லை. மீண்டும் அதை கண்டறிந்து, வியாபாரி வங்கி கணக்குக்கு திருப்ப அனுப்ப மாதமாகிறது. தமிழக விவசாயிக்கு செலுத்திய பணம், உத்தரபிரதேச விவசாயி கணக்கில் வரவாகி பெற முடியாமல் போனது.

வடமாநிலத்தில் இருந்து, இங்கு ஏலம் எடுத்தவர், பணம் செலுத்த தவறும் பட்சத்தில், அப்பொருளை மீண்டும் ஏலத்துக்கு வைக்க, பல நிபந்தனைகளை சரி செய்ய வேண்டி உள்ளது. சர்வர் டில்லியில் உள்ளதால், தமிழக அதிகாரிகளால் தலையிட முடியவில்லை. இதனால், மஞ்சள், கொப்பரை தேங்காய் உட்பட பல்வேறு ஏலத்தில், ஒரு வாரத்துக்கு மேலாக வியாபரிகள் பங்கேற்கவில்லை.

இவ்வாறு கூறினர்.

* ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர் சங்க செயலர் சத்தியமூர்த்தி கூறுகையில்,‘‘கொடுமுடி உட்பட சில இடங்களில் வியாபாரிகள் அனுப்பிய பணம், விவசாயிக்கு செல்லாததால், பிரச்னை. அப்பணம் திரும்ப வரவில்லை. ‘என்.சி.டெக்ஸ்’ உட்பட பல ஆன்லைன் மார்க்கெட், தேசிய அளவில் எளிதாக நடக்கிறது. இது அவ்வாறு இல்லை. தேசிய அளவில் ஈரோட்டில்தான் மஞ்சளுக்கு, 4 மார்க்கெட்டில் ஏலம் நடக்கிறது. நான்கிலும் வியாபாரிகள் பங்கேற்பர். இ–நாமில் பல விதிமுறைகளை கடந்து, ஒரு ஏலத்தில் கூட வியாபாரி பங்கேற்க முடியாமல் போகிறது. சீசன் நேரத்தில் சர்வர் நின்று விடுகிறது. இதுபற்றி, வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் மூலம், அரசிடம் கொண்டு சென்றுள்ளோம். கடந்த இரு நாட்களாக பெருந்துறை, கோபி ஒழுங்குமுறை விற்பனை கூட மஞ்சள் ஏலத்தில் வணிகர்கள் பங்கேற்கவில்லை,’’ என்றார்.

* தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு கூறுகையில்,‘‘கொப்பரை தேங்காய் ஏல வியாபாரிகள் கடுமையாக பாதிப்பதால், ஒரு வாரத்துக்கு மேலாக ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற, 10க்கும் மேற்பட்ட மாவட்ட ஏலத்தில் பங்கேற்கவில்லை,’’ என்றார்.

* இதுபற்றி, ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறுகையில்,‘இப்பிரச்னை தேசிய அளவிலானது. இ–நாம் மூலமே ஏலம் நடக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. முதல் கட்டமாக தமிழகம், ராஜஸ்தான் மாநிலத்தில் பரிச்சார்த்த முறையில் அமலாக்கி, சாப்ட்வேர், சர்வர் பிரச்னைகளை சீரமைக்கிறது. இப்பணி முடிந்ததும், தேசிய அளவில் விவசாயிகள், வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்கலாம்’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us