UPDATED : மே 16, 2024 01:26 PM
ADDED : மே 16, 2024 12:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளா செல்லும் கம்ப மெட்டு பகுதியில், காருக்குள் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கார் கேரள பதிவெண் என்பதால், கேரள போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த விசாரணையில், தற்கொலை செய்து கொண்டது, கேரள மாநிலம் கோட்டயம், புதுப் பள்ளியை சேர்ந்த ஜார்ஜ்(60), மனைவி மெர்சி(56) மகன் அகில்(32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.