ADDED : ஏப் 22, 2025 03:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில், மூன்று பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது.
ஆனாலும், கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. எனவே, காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன்படி, 32 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையைச் சேர்ந்த, இரண்டு ஆண்கள், ஒரு பெண் என, மூவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூவரும் நலமுடன் உள்ளனர்.
தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.