ADDED : ஜன 31, 2025 10:26 PM
சென்னை:வழிப்பறி செய்த வழக்கில் கைதான போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்கு உதவிய, வருமான வரித்துறை அலுவலக ஓட்டுநர் உட்பட மூவரிடம் விசாரணை நடக்கிறது.
சென்னையில் டிசம்பர் 16ல், வருமான வரித்துறை அலுவலக அதிகாரிகள் பிரபு, பிரதீப், தாமோதரன் ஆகியோருடன் சேர்ந்து, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில், போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,க்கள் ராஜா சிங், சன்னி லாய்டு உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கில், திருவல்லிக்கேணி போலீசார், நான்கு நாள் காவலில் சன்னி லாய்டிடம் விசாரித்தனர். அப்போது, இவருக்கு சென்னையில் ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்படும் பணத்தை வழிப்பறி செய்ய, வருமான வரித்துறை அலுவலக ஓட்டுநர் ஒருவர் மற்றும் கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உதவியது தெரிய வந்தது. அந்த மூவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.