ADDED : ஜூலை 19, 2011 06:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோல்கட்டா : மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில், 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுப்பிரிவு கொடுத்த தகவலையடுத்து, மாநில போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, உளவுப்பிரிவு உயர் அதிகாரி கூறியதாவது, இந்த 3 பயங்கரவாதிகளில் இருவர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், மற்றொருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். இவர்கள் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் உள்ள டவுன் பகுதியில் பதுங்கியுள்ளனர். இவர்களை குறித்த தகவல், மாநில போலீசாருக்கு 16ம் தேதியே வழங்கப்பட்டு விட்டது. இதனையடுத்து அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

