ADDED : பிப் 13, 2025 02:02 AM
சென்னை:ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட, 16 மாநகராட்சிகளின் எல்லைகள், விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மேலும், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிதாக, 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம்; காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார்; தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஆகிய மூன்று பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
அப்பகுதியின் வரலாறு, சுற்றுலா ஆகியவற்றின் முக்கியத்துவம், வணிகம், தொழில் வளர்ச்சி உள்ளிட்டவை போன்றவற்றை கருத்தில் வைத்து, நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இவற்றின் விபரங்கள், தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.