தீய சக்தி, தீர்ந்து போன சக்தியை புறந்தள்ளுங்கள்: முதல்வர் விஜய்
தீய சக்தி, தீர்ந்து போன சக்தியை புறந்தள்ளுங்கள்: முதல்வர் விஜய்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 06:14 PM
சென்னை: ‘லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன், மனசாட்சி உள்ள மக்களாட்சியை, இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்’ என, முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சட்டசபை தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பெருவாரியான ஓட்டுகளை த.வெ.க.,விற்கு வாரி வழங்கினீர்கள். உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்தியவர்களுக்கு, என் நன்றிக்கடனை திருப்பி தரும் நேரமிது. மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமர்த்திய, தமிழக மக்களுக்கு, எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. இது தமிழக மக்களின் ஆட்சி; இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் பரப்புரை செய்து, வாகன பிரசாரம் மேற்கொண்டேன். அப்போது, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பும், அன்பும், பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திலும் என் நெஞ்சில் நிலைத்திருப்பது. இதற்காக வாழ்நாள் முழுதும் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த இடைத்தேர்தலில், இவ்வளவு காலம் நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்து போன சக்தியையும் புறந்தள்ளுவீர்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரிப்பீர் என்பதை, இந்த நாடறியும்; அதற்காக நான் முன்கூட்டியே, என் நன்றியை உரித்தாக்குகிறேன்.
மக்கள் நலனை காக்க, எதிலும், எப்போதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன், மனசாட்சி உள்ள மக்கள் ஆட்சியை, இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
