இஷ்டத்திற்கு குண்டர் சட்டமா?: பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்கிறது ஐகோர்ட்
இஷ்டத்திற்கு குண்டர் சட்டமா?: பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்கிறது ஐகோர்ட்
ADDED : ஆக 17, 2024 03:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: '' குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது'' என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
நில மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி. சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தனிநபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது. யார் மீது பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றி அரசு தீவிரமாக சந்திக்க வேண்டும். அதில் தெளிவாக இருக்க வேண்டும் . சர்வசாதாரணமாக இச்சட்டத்தை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர்.

