ADDED : பிப் 27, 2024 11:18 PM
சென்னை:லோக்சபா தேர்தல் நெருங்குவதால், காலம் தாழ்த்தாமல் சாலை சீரமைப்பு பணிகளை முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை யால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு, வேலுார், திருவண்ணா மலை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப் பாட்டில் உள்ள சாலைகள் சேதமடைந்துள்ளன.
வரலாறு காணாத மழையால், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில், சாலைகள் துண்டிக்கப்பட்டு, தற் காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொத்தமாக வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைப்பதற்கு, நெடுஞ்சாலை துறைக்கு, 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், சாலை புனரமைப்பு பணிகளை, மார்ச், 10க்குள் முடிக்க, ஒப்பந்த நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.
இலக்கு நிர்ணயித்த காலத்திற்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

