தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ஆகம கோவில்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்

ஆகம கோவில்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்

ஆகம கோவில்கள் குறித்து கருத்து தெரிவிக்க அவகாசம்


ADDED : நவ 08, 2026 06:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2026 06:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்களில், ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்டவை குறித்து, பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, ஆகம குழுவால் பரிசீலிக்கப்பட்ட, 34,971 கோவில்கள் குறித்த விபரங்கள், துறையின் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில், கடந்த ஆகஸ்ட், 25ம் தேதி வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை வரும் 25ம் தேதி வரை தெரிவிக்கலாம்.

கருத்துக்களை, தபால் வாயிலாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ, 25ம் தேதி, மாலை 5.45 மணிக்குள், தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us