திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
UPDATED : அக் 11, 2026 08:25 PM
ADDED : அக் 11, 2026 08:06 PM
திருப்பூர்: திருப்பரங்குன்றம் மலை மீது, கார்த்திகை தீபம் ஏற்ற, அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஹிந்து முன்னணி சார்பில், திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம், கடந்த ஆண்டு சர்ச்சையானது. நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கிய நிலையில், அடுத்த மாதம் நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, அவற்றை பின்பற்றி தீபம் ஏற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில், ஹிந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ‘‘முந்தைய அரசு மலை மீது, தீபம் ஏற்றுவதில் அக்கறை காட்டவில்லை; பக்தர்களின் போராட்டம் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
பாரம்பரியமாக தீபம் ஏற்றி வழிபடும் உரிமையை பாதுகாக்கும் வகையில், தற்போதைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.
