sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'அமெரிக்க பருத்தியை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்திய ஆடைகளுக்கு வரி விலக்கு வேண்டும்': திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

/

'அமெரிக்க பருத்தியை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்திய ஆடைகளுக்கு வரி விலக்கு வேண்டும்': திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

'அமெரிக்க பருத்தியை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்திய ஆடைகளுக்கு வரி விலக்கு வேண்டும்': திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்

'அமெரிக்க பருத்தியை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்திய ஆடைகளுக்கு வரி விலக்கு வேண்டும்': திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்


ADDED : ஆக 30, 2025 03:40 AM

Google News

ADDED : ஆக 30, 2025 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: அமெரிக்க பருத்தியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இந்திய ஆடை ஏற்றுமதிகளுக்கு 50 சதவீத இறக்குமதி வரியிலிருந்து விலக்கு பெற்றுத் தர வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சக்திவேல், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வணிகத் துறை செயலருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு, இந்திய ஆடை ஏற்றுமதித் துறையின் போட்டித்தன்மை, நிலைத்தன்மை மற்றும் வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இந்தியாவின் ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி பொருட்களுக்கான மிகப்பெரிய மற்றும் முக்கியமான ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஆடைகள் ஏற்றுமதி, கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாயாக இருந்தது. இது, இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில், கிட்டத்தட்ட 30 சதவீதம் ஆகும்.

திருப்பூர், நொய்டா, குருகிராம், பெங்களூரு, லுாதியானா மற்றும் ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆடைத் தொழில் கூடங்கள் அமெரிக்க ஆர்டர்களை பெரிதும் நம்பியுள்ளன.

இவை பல லட்சம் வேலைவாய்ப்புகளை, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களில் உருவாக்குகின்றன. கடந்த பல ஆண்டுகளாகவே, அமெரிக்க சந்தையின் வளர்ச்சி, இந்திய ஜவுளித் துறையின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய்க்கு முக்கிய பங்களித்து வருகிறது.

கடந்த 27ம் தேதி முதல், இந்திய ஆடை இறக்குமதிகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்திய ஏற்றுமதியாளர்கள் அமெரிக்காவில் அதிகபட்ச வரியை எதிர்கொள்கின்றனர். இதனால் வங்கதேசம், வியட்நாம் மற்றும் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்திய ஆடைகள் போட்டித்தன்மையை இழக்கின்றன.

அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்திய ஆடைகளுக்கு, வரி விதிப்பிலிருந்து உடனடி விலக்கு அளிக்க வேண்டும் என, அமெரிக்க அரசுடன் பேச்சு நடத்துமாறு வர்த்தக அமைச்சகத்தை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வர்த்தக துறையின் 'போகஸ் மார்க்கெட்' திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தி, ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் 'பிரீ ஆன் போர்டு' மதிப்பு எனும், பொருட்கள் கப்பலில் ஏற்றப்படும் இடத்தில் உள்ள மொத்த விலைமதிப்பில், 20 சதவீதத்தை ஊக்கத்தொகை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை, டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்ததற்கு, நன்றி தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு தெரிவித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us