தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ திருவண்ணாமலை - நரசப்பூர் சிறப்பு ரயில் நிரந்தரமானது

 திருவண்ணாமலை - நரசப்பூர் சிறப்பு ரயில் நிரந்தரமானது

 திருவண்ணாமலை - நரசப்பூர் சிறப்பு ரயில் நிரந்தரமானது


ADDED : மே 21, 2026 03:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 03:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:திருவண்ணாமலை - நரசப்பூர் சிறப்பு ரயிலை, நிரந்தரமாக இயக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து உள்ளது.

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முக்கியமானது. இக்கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

பவுர்ணமி கிரிவல நாட்களில், லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எனவே, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை ரயில் நிலையம், 7.86 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் படுகிறது.

இந்த ரயில் நிலையத்தை, முனையமாக மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.

பயணியர் வசதிக்காக, ஆந்திர மாநிலம் நரசப்பூரில் இருந்து திருவண்ணா மலைக்கு புதன்கிழமை யும், திருவண்ணாமலையில் இருந்து நரசப்பூருக்கு வியாழக்கிழமையும், சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தரமாக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரயிலை தினமும் இயக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us