மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
ADDED : ஏப் 08, 2025 02:07 PM

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பிறந்த நாள் வாழ்த்து பேனரை கட்டும் போது மின்சாரம் பாய்ந்ததில் நண்பர்கள் இருவர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
திருவண்ணாமலை அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மகன் லோகேஷ்(16). இவரும் தனுஷ் மற்றும் கண்ணன் என்பவரும் நெருங்கிய நண்பர்கள்.
இன்று (ஏப்.8) கண்ணனுக்கு பிறந்த நாள். அதற்கு வாழ்த்து கூற எண்ணிய நண்பர்கள் திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் வாழ்த்து பேனர் ஒன்றை கட்டியுள்ளனர். அப்போது பேனர் மேல்பக்கத்தில் கயிறு கட்ட லோகேஷ், தனுஷ் இருவரும் மின்மாற்றி மீது ஏறி இருக்கின்றனர். எதிர்பாராத விதமாக, இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.
இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர்.சடலங்களை மீட்ட அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.