sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க.,விடம் 12 தொகுதிகளை கேட்கிறது த.மா.கா.,

/

அ.தி.மு.க.,விடம் 12 தொகுதிகளை கேட்கிறது த.மா.கா.,

அ.தி.மு.க.,விடம் 12 தொகுதிகளை கேட்கிறது த.மா.கா.,

அ.தி.மு.க.,விடம் 12 தொகுதிகளை கேட்கிறது த.மா.கா.,

5


ADDED : மார் 13, 2026 06:55 PM

Google News

ADDED : மார் 13, 2026 06:55 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: வரும் சட்டசபை தேர்தலில், அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ள த.மா.கா., தேர்தலில் போட்டியிட 12 தொகுதிகளை கேட்டுள்ளது.

த.மா.கா., சார்பில் 'போதை ஒழிப்போம்; சமூகம் காப்போம்' தலைப்பில், ஈரோட்டில் கையெழுத்து இயக்கம் தொடங்கியது. அதில் பங்கேற்ற த.மா.கா., துணை தலைவர் விடியல் சேகர், பொதுச்செயலர் யுவராஜா ஆகியோர் அளித்த பேட்டி:

போதை பொருள் கலாசாரம் அதிகரித்து விட்டது. அதை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு தவறியதால், கொள்ளை, கொலை, சிறுமியர் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்குள்ளாவது என குற்றங்கள் நடக்கின்றன. எங்கள் கட்சியின் கொள்கை மது ஒழிப்பு; எனவே, தேர்தலுக்காக இப்பிரச்னையை கையில் எடுக்கவில்லை.

மது ஒழிப்பு குறித்து, தேர்தல் வாக்குறுதியில் தெரிவிப்பது பற்றி, எங்கள் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியின் தலைமைக்கும் தெரிவிப்போம். வரும் சட்டசபை தேர்தலில், த.மா.கா.,வுக்கு 12 தொகுதிகள் கேட்டுள்ளோம். கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும்போது, உரிய தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். அவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us