தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா

தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா

தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா

42


UPDATED : ஜூன் 14, 2026 04:31 PM

ADDED : ஜூன் 14, 2026 03:41 PM

Follow on GoogleFavourite on Google

42

UPDATED : ஜூன் 14, 2026 04:31 PM ADDED : ஜூன் 14, 2026 03:41 PM


42
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தனித்தன்மையோடு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்தப்போவதாக வாசன் கூறியுள்ளார்.

ராஜ்யசபா எம்பி

ஜி.கே.வாசன் தலைமையிலான தமாகா கட்சி, கடந்த 2019 ம் ஆண்டு முதல் தேஜ கூட்டணியில் நீடித்து வருகிறது. அதிமுக ஆதரவுடன் வாசன் ராஜ்யசபா எம்பி ஆனார். 2024 லோக்சபா தேர்தலில் இக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய போதும் தமாகா தேஜ கூட்டணியிலேயே நீடித்தது.

தோல்வி

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமாகா 5 தொகுதிகளில் போட்டியிட்டது. தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. அப்போ அக்கட்சி நிர்வாகிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

செயற்குழுகூட்டம்


இந்நிலையில் சென்னையில் இன்று, தமாகா செயற்குழு கூட்டம் நடந்தது.இந்தக் கூட்டத்திற்கு பிறகு தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமாகா அறிவித்துள்ளது.

கூட்டணி தர்மம்

செயற்குழு கூட்டத்திற்கு பிறகு தமாகா தலைவர் வாசன் கூறியதாவது: எந்த கட்சியாக இருந்தாலும், எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதில் பல சவால்கள் உள்ளதை நாங்கள் அறிவோம். கூடுதல் இடங்கள் கிடைத்திருக்கலாம் என்ற சவால் இருக்கலாம். கேட்ட இடங்கள் கொடுக்கவில்லை என்ற எண்ணமிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி கூட்டணிக்கு, கூட்டணி தர்மத்துக்கு எடுத்துக்காட்டான கட்சியாக செயல்பட்டது தமாகா.



நட்புக்கட்சி

பல்வேறு தொண்டர்கள், பொறுப்பாளர்களை தாண்டி, பல்வேறு சவால்களை தாண்டி கூட்டணி வெற்றிபெற வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தமாகா பணியாற்றியது.தற்போது பாஜ, அதிமுக அதனைசார்ந்த கூட்டணி கட்சிகளோடு எந்த சண்டையும் கிடையாது. தோற்றுவிட்டோம் என சண்டைக் கட்சியாக மாறவில்லை. நட்புக் கட்சியாக நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

தனித்தன்மை

இந்த தேர்தல் குறித்து இன்றைய கூட்டத்தில் கருத்துகள் கூறப்பட்டன. 600 பேர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் 400க்கும் மேற்பட்டோர் எழுத்துப்பூர்வமாகவும், நேரடியாகவும் பதிவு செய்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரின் எண்ணமும், உள்ளாட்சி தேர்தல் வரும் வரை தமாகா தமிழகத்தில் தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என்பது தான்.தனித்தன்மையோடு தமாகா செயல்பட்டு மீண்டும் அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.கூட்டணியில் பொறுப்புகள், குறைவதாக பொறுப்பாளர்கள் கருதுகின்றனர். கூட்டணி அரசியலில் கட்சி வளர்ச்சி குறைவதாக கருதுகின்றனர்.

தேர்தலில் கூட்டணி

தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது மாற்றுக் கருத்து இல்லை. அப்போது தான் எல்லா கட்சிக்கும் கூட்டணியில் வலு. தேர்தல் இல்லாத நேரத்தில் கூட்டணி இல்லாமல் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் தங்களின் கட்சி பணியை பொறுப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டிய நிலை ஏற்பட வேண்டும். அதற்கு தமாகா தனித்தன்மையோடு செயல்பட வேண்டும் என விரும்புகின்றனர். அதன் அடிப்படையில் தேஜ கூட்டணியில் மத்தியில் பாஜ, மாநிலத்தில் அதிமுக, மற்றும் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் தமாகா நட்புக் கட்சியாக விளங்குகிறது.



வலுப்படுத்துவோம்

வருங்காலத்தில் தமாகா தன்னை பலப்படுத்தவும், வலுப்படுத்தவும், நகரம் முதல் கிராமம் வரை மீண்டும் எங்கள் பணியை துவக்குவோம். 12 ஆண்டுகள் கூட்டணி அரசியலில் இருந்த காரணத்தினால் எங்களின் வலு குறைந்ததாக கருதுகிறோம். காரணம், கூட்டணி கட்சிகள், அதன் சார்ந்த பணிகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று தனித்தன்மையை இழக்க நாங்கள் விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி. அதுவரை கட்சியை பலப்படுத்துவதுஎன செயற்குழு எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நேரலை


தேஜ கூட்டணியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக தமாகா தலைவர் வாசன் அளித்த பேட்டி தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.இதனை பார்க்க கிளிக் செய்யவும்:https://www.youtube.com/watch?v=VXAbSpXHvpg

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us