த.மா.கா., யாருடன் கூட்டணி? பிப்., 12 பொதுக்குழுவில் முடிவு
த.மா.கா., யாருடன் கூட்டணி? பிப்., 12 பொதுக்குழுவில் முடிவு
ADDED : பிப் 04, 2024 03:42 AM

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி, மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட 12 துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை, கட்சியின் தலைவர்வாசனுக்கு வழங்கிதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசிய வாசன், ''த.மா.கா., நிறுவனர் மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், லோக்சபா தேர்தலில் த.மா.கா., முடிவெடுக்கும். தி.மு.க., -- காங்.,கூட்டணிக்கு எதிராக வலுவான கூட்டணி அமையும்,'' என்றார்.
பின்னர் வாசன் அளித்த பேட்டி:
த.மா.கா., பொதுக்குழு எழும்பூரில் பிப்ரவரி 12ம் தேதி கூடுகிறது. அதில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு, கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்.
பா.ஜ., -அ.தி.மு.க., தலைவர்களை நான் சந்திப்பது புதிதல்ல. அடிக்கடிசந்திக்கிறேன். அப்படிதான் நட்டாவையும் பழனிசாமியையும் சந்தித்தேன்.
இவ்வாறு வாசன் கூறினார்.