டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் 2025 அட்டவணை வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் 2025 அட்டவணை வெளியீடு
ADDED : அக் 11, 2024 03:10 AM
சென்னை:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 2025ம் ஆண்டு நடத்தப்பட உள்ள போட்டித் தேர்வுகளுக்கான தேதி குறித்த விபரங்களை, வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. மேலும் விபரங்களை, 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு வகை --- அறிவிப்பு வெளியாகும் தேதி - தேர்வு தேதி /
---------------------------------------------------------
குரூப் - 1 2025 ஏப்., 1 - 2025 ஜூன் 25
குரூப் - 4 2025 ஏப்., 25 - 2025 ஜூலை 13
நேர்முகத் தேர்வுடன் தொழில்நுட்ப பணி - 2025 மே 7 - 2025 ஜூலை 21
நேர்முகத் தேர்வு இல்லாத தொழில்நுட்ப பணி - 2025 மே 21 - 2025 ஆக., 4
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (டிப்ளமா, ஐ.டி.ஐ.,) - 2025 ஜூன் 13 - 2025 ஆக 27
குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வு 2025 ஜூலை 15 - 2025 செப்., 28
குரூப் - 5ஏ 2025 அக்., 7 - 2025 டிச., 21

