விஜய் கட்சியால் வேகமெடுத்ததாக சொல்வது சுத்த அபத்தம்
விஜய் கட்சியால் வேகமெடுத்ததாக சொல்வது சுத்த அபத்தம்
ADDED : டிச 18, 2024 07:49 PM
புல் அவுட்:
தென் மாவட்டங்களில் வெள்ள சேதத்துக்கு ரூ. 6,000 நிவாரணம் கொடுத்த தமிழக அரசு, தற்போது வட மாவட்டங்களில் ரூ. 2,000 மட்டுமே கொடுப்பது அநீதி.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கை புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, புதிய பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பது. அதற்காக, அரசை வலியுறுத்தி பல கட்டம் போராட்டம் நடத்தி உள்ளனர். அதை அரசு முறையாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விஜய், கட்சி ஆரம்பித்ததால் மற்ற கட்சிகள் வேகமாக வேலை செய்கின்றன என சிலர் கூறுவது சுத்த அபத்தம்.
வரும் 28ல் நடக்கவிருக்கும் பா.ம.க., பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குறித்த முதல்வரின் பேச்சு பா.ம.க., நிர்வாகிகளையும் தொண்டர்களையும் புண்படுத்தி உள்ளது.
வி.சி.,கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, பா.ம.க.,வுக்கு வர விரும்பினால் பரிசீலிப்போம்.
ஜி.கே.மணி, கவுரவ தலைவர், பா.மக.,

