ஆபரணத் தங்கம் விலையில் தொடரும் இறங்குமுகம்: சவரன் ரூ.640 குறைவு
ஆபரணத் தங்கம் விலையில் தொடரும் இறங்குமுகம்: சவரன் ரூ.640 குறைவு
ADDED : ஆக 12, 2025 09:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது.
அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டன. அதிரடியாக உயர்வதும், பின்னர் சீரான விலையில் இறங்குவதாக இருந்தது. ஒரு கட்டத்தில் சவரன் ரூ.75,000த்தை கடந்து பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
இந் நிலையில், 2வது நாளாக ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் குறைந்து காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் தங்கம் விலை சவரன் ரூ.640 குறைந்துள்ளது.
ஒரு கிராம் தங்கம் 80 ரூபாய் குறைந்து ரூ.9295 ஆக இருக்கிறது. சவரன் ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
2 நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் அடுத்து வரக்கூடிய வர்த்தக நாட்களில் தங்கத்தின் விலையில் சீரான மாற்றங்கள் காணப்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.