ADDED : நவ 06, 2026 12:32 AM
சென்னை: ‘தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை’ என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட, விடுமுறை தின பட்டியலில், தீபாவளி பண்டிகைக்காக, நவ.,8, 9ம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளியூர் செல்வோர் வசதிக்காக, நவ., 6ம் தேதி, நீதிமன்றங்களுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என, வழக்கறிஞர் சங்கங்கள், தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தன.
அதனை ஏற்று, தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள, அனைத்து நீதிமன்றங்களுக்கும், இன்று விடுமுறை அறிவிக்க அனுமதி அளித்தார். அதைத் தொடர்ந்து, இன்று நீதிமன்றங்களுக்கு விடுமுறை என, தலைமைப் பதிவாளர் தீப்தி அறிவுநிதி தெரிவித்துள்ளார்.
