உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 05, 2026 09:48 PM
அ நிறம் | அளவு
சேலம்: தீபாவளியை முன்னிட்டு சென்னை – கொல்லம் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில், நவ., 7(நாளை), 14 ஆகிய சனிக்கிழமைகளில், இரவு, 11:40 மணிக்கு புறப்படும் ரயில், அதிகாலை, 3:15க்கு ஜோலார்பேட்டை, 5:00 மணிக்கு சேலம், 6:05க்கு ஈரோடு, 6:58க்கு திருப்பூர், 8:25க்கு போத்தனுார் வழியே மாலை, 4:20க்கு கொல்லத்தை அடையும்.
மறுமார்க்க ரயில், வரும், 8, 15 ஆகிய ஞாயிறு மாலை, 6:45 மணிக்கு கொல்லத்தில் கிளம்பி, அதிகாலை, 2:18க்கு போத்தனுார், 3:00 மணிக்கு திருப்பூர், 3:55க்கு ஈரோடு, 4:57க்கு சேலம், 7:10க்கு ஜோலார்பேட்டை வழியே, 11:35க்கு சென்னை சென்ட்ரலை அடையும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
