ADDED : மார் 08, 2024 12:04 PM

மஹா சிவராத்திரி விழா, பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் தெய்வீக திருமணத்தை சித்தரிக்கிறது. இந்த நாளில் இறைவன் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன.
தலைநகர் டில்லியில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிக அன்பர்களுக்கு சேவை செய்து வரும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், டில்லி அருகே நொய்டாவில் அமைந்து உள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம், அதைத் தொடர்ந்து சங்காபிஷேகம், நான்கு கால பூஜைகள் செய்து, மஹா சிவராத்திரி விழாவை வேத மரபுப்படி இன்று கோலாகலமாக கொண்டாடுகிறது. 'மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ கர்ம தோஷங்களிலிருந்து விடுபட செய்யப்படுகிறது. முதலில், பிரதோஷ பூஜையும், அதைத்தொடர்ந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கால பூஜைகள் இன்று மாலையிலும், நான்காவது கால பூஜைகள் நாளை அதிகாலையிலும் நடக்கின்றன.
மஹா சிவராத்திரி விழா, பார்வதி தேவி மற்றும் சிவபெருமானின் வான திருமணத்தை சித்தரிக்கிறது. இந்த நாளில் இறைவன் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் பிரபஞ்ச நடனத்தை நிகழ்த்தியதாக புராணங்கள் கூறுகின்றன.
தலைநகர் டில்லியில், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மிக அன்பர்களுக்கு சேவை செய்து வரும் வேத பிரசார சன்ஸ்தான், டில்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில், மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம், அதைத் தொடர்ந்து சங்காபிஷேகம், நான்கு கால பூஜைகள் செய்து, மஹா சிவராத்திரி விழாவை வேத மரபுப்படி இன்று கோலாகலகாக கொண்டாடுகிறது.
'மஹா ம்ருத்யுஞ்சய ஹோமம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ கர்ம தோஷங்களிலிருந்து விடுபட செய்யப்படுகிறது. முதலில், பிரதோஷ பூஜையும், அதைத்தொடர்ந்து முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது கால பூஜைகள் இன்று மாலையிலும், நான்காவது கால பூஜை நாளை அதிகாலையிலும் நடக்கின்றன.
வரசித்தி விநாயகர்
நொய்டா 22வது செக்டாரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலிலும் சிவராத்திரி விழா இன்று வெகுவிமரியாக நடக்கிறது.
இங்கு இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பிரதோஷம் மற்றும் மஹா சிவராத்திரி பூஜைகள் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில், செக்டார் 62ல் சமீபத்தில் திறக்கப்பட்ட ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் ஆகியவற்றை நொய்டாவில் இயங்கும் வி.பி.எஸ்., என அழைக்கப்படும் வேத பிரசார சன்ஸ்தான் நிர்வகித்து வருகிறது.
ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலின் மஹா கும்பாபிஷேகம், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ல் கோலாகலமாக நடத்தப்பட்டது.
ஒரே கல்லில் வடிவமைத்துள்ள முருகன் சிலை, 4.5 அடி உயரம் கொண்டது. இதுபோன்ற சிலை, உத்தர பிரதேச மாநிலத்திலேயே இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது.
செல்வது எப்படி
டில்லி விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ., தூரத்திலும் புதுடில்லி ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ., தூரத்திலும் இந்தக் கோவில் அமைந்துள்ளது.
டில்லி மெட்ரோ ரயிலில் புளூ லைன் வழித்தடத்தில் துவாரகா -- நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி ரயிலில் பயணித்து செக்டார் 62ல் இறங்கி, கேட் எண் -1 வழியாக வெளியே வந்தால், ஸ்ரீவிநாயகா மற்றும் ஸ்ரீகார்த்திகேயா கோவிலை எளிதாக அடையலாம்.
அதேபோல, 22வது செக்டாரில் அமைந்துள்ள ஸ்ரீ வரஸித்தி விநாயகர் கோவிலில், 'மூர்த்தி சிறியதாக இருந்தாலும்' கீர்த்தி பெரிது'
'தெய்வீக சக்தி' உள்ள இந்த விநாயகரை தரிசிக்க நொய்டா மட்டுமின்றி பல பகுதிகளில் இருந்தும், 35 ஆண்டுகளுக்கும் மேலாக பக்தர்கள் குவிகின்றனர். இதுபோன்ற விநாயகர் சிலையை வடஇந்தியாவில் வேறு எந்தக் கோவிலிலும் பார்க்க முடியாது.
எப்படி செல்வது
டில்லி விமான நிலையத்திலிருந்து 30 கி.மீ., தூரத்திலும் புதுடில்லி ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீ., தூரத்திலும் வரஸித்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
டில்லி மெட்ரோ ரயிலில் ப்ளூ லைன் வழித்தடத்தில் துவாரகா - நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி செல்லும் ரயிலில் பயணித்து, செக்டார் 16ல் இறங்கி கேட் எண் 1 வழியாக வெளியே சில நிமிடங்களில் கோவிலை அடையலாம்.
********************************
Photo Captions :
செக்டர் 62ல் அலங்கரிக்கப்பட்ட சந்திரமௌலீஸ்வரர்
செக்டர் 62ல் திருபுரசுந்தரி அம்மன்
நொய்டாவில் புதிதாக திறக்கப்பட்ட செக்டர் 62 கோவில் வளாகம்
ஸ்ரீ வரசித்தி விநாயகர், செக்டார் 22, நொய்டா

