தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

இன்றைய முக்கிய நிகழ்வுகள்!

இன்றைய முக்கிய நிகழ்வுகள்!


UPDATED : ஜன 19, 2026 06:36 PM

ADDED : ஜன 19, 2026 08:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2026 06:36 PM ADDED : ஜன 19, 2026 08:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள், இன்று (ஜனவரி 19) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல்.

மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப் 27ல் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். இந்த சம்பவம் குறித்து இன்று 2வது முறையாக டில்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடந்தது.

* அதிமுகவுடன் தொகுதி பங்கீடு, கூட்டணியை விரிவுப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்த மத்திய அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று தமிழக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

* போரை முடிவுக்கு கொண்டு வர காசா அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்மொழிந்தார். காசா அமைதி வாரியத்தையும் டிரம்ப் அறிவித்து இருக்கிறார். இந்த திட்டம் தொடர்பாக இன்று உலக நாடுகள் பரபரப்பாக விவாதித்து வருகின்றன.

* பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஐக்கிய அரபு எமிரேட்சின்( யுஏஇ) அதிபர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் இன்று இந்தியா வந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அவரை வரவேற்றார். இந்தியாவும், யுஏஇயும் வலுவான பொருளாதார உறவுகளை கொண்டுள்ளன. நெருக்கமான மற்றும் பன்முக உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன.

* பாஜ புதிய தேசியத் தலைவரை தேர்வு செய்ய கடைசி நாளான இன்று, தற்போதைய செயல் தலைவர் நிதின் நபின் சார்பில், பல்வேறு மாநில முதல்வர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் முன்மொழிந்துள்ளனர். இதனால் நிதின் நபின் தேசிய தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. ஜன.,20ல் அறிவிப்பு வெளியாகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us