ADDED : அக் 05, 2024 12:55 AM
வரத்து சரிவால்
தக்காளி விலை உயர்வு
ஈரோடு, அக். 5-
ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு தாளவாடி, தர்மபுரி, தாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரத்தாகும்.
சில வாரங்களாக வரத்து அதிகமாக இருந்ததால் ஒரு கிலோ, 20 முதல், 25 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது வரத்து குறைந்து ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்கு மொத்த விலையிலும், சில்லறை விற்பனையில், 45 முதல், 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஈரோடு மார்க்கெட்டுக்கு தினமும், 8,000 பெட்டிகள் தக்காளி வரத்தாகும். தற்போது, 2,000 பெட்டிகள் மட்டுமே வரத்தாவதால், விலை உயர்ந்துள்ளது, என வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம், 15 கிலோ எடை பெட்டி, 350 ரூபாய்க்கும், 30 கிலோ பெட்டி, 750 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று, 30 கிலோ பெட்டி, 1,500 ரூபாய்க்கு விற்பனையானது.