உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 10, 2026 07:03 AM

அ நிறம் | அளவு
சென்னை: தி.மு.க., தலைமை நேற்று வெளியிட்ட அறிக்கை: தி.மு.க.,வையும், ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியையும், 23 வயதில், 'மிசா'வில் கைதான தி.மு.க., தலைவர் ஸ்டாலினையும் கொச்சைப்படுத்தி, சட்டசபையில் முதல்வர் விஜய் பேசியது, கண்டனத்துக்குரியது.
ஆட்சியின் தோல்விகளுக்கு, பதில் சொல்ல முடியாமல் தப்பிக்க, கொச்சையாக பேசும், தரமற்ற மனிதராக, முதல்வர் விஜய் மாறியிருக்கிறார். அவரது பேச்சை கண்டிக்கும் வகையில், தி.மு.க., சார்பில், வருவாய் மாவட்டங்களில், வரும் 12ம் தேதி மாவட்டச் செயலர்கள் தலைமையில், ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
