தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/நாளை மறுநாள் (நவ.13)உருவாகிறது காற்றழுத்தம் வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை மறுநாள் (நவ.13)உருவாகிறது காற்றழுத்தம் வானிலை ஆய்வு மையம் தகவல்

நாளை மறுநாள் (நவ.13)உருவாகிறது காற்றழுத்தம் வானிலை ஆய்வு மையம் தகவல்


UPDATED : நவ 11, 2026 06:37 PM

ADDED : நவ 11, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 06:37 PM ADDED : நவ 11, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: 'தென்கிழக்கு வங்கக்கடலில், நாளை மறுநாள் (நவ.13) உருவாகும் புதிய காற்றழுத்தம், வரும், 15ல் வலுவடைந்து, புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளது' என. வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வந்த கனமழை தற்போது ஓய்ந்துள்ளது. வரும், 16ம் தேதி வரை, கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை. ஏற்கனவே விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை, மிதமான மழையாக குறைக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இது நாளை, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. அதன் பின், 24 மணி நேரத்தில், இந்த அமைப்பு, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அதாவது புயல் சின்னமாக வலுவடைய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.

இதனால், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய வட கடலோர மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும், இன்று லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us