பொறியியல் துணை கவுன்சிலிங் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
பொறியியல் துணை கவுன்சிலிங் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
ADDED : ஆக 03, 2011 10:10 PM

சென்னை : பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், துணை கவுன்சிலிங்கில் பங்கேற்க, நாளை மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த மாதம் 8ம் தேதியில் இருந்து, சென்னை அண்ணா பல்கலையில் பொறியியல் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 74 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 75 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்நிலையில், பொதுப்பிரிவு கவுன்சிலிங், வரும் 11ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையே, பிளஸ் 2 உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களுக்கும் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு அளிக்கும் வகையில், துணை கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
இதற்காக, கடந்த 1ம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், நாளை மாலை 5.30 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவர்களுக்கு, 12ம் தேதியில் இருந்து கவுன்சிலிங் நடைபெற உள்ளது.