இஸ்ரோவில் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி
இஸ்ரோவில் விஞ்ஞானி பயிற்சி விண்ணப்பிக்க நாளை கடைசி
ADDED : மார் 21, 2025 12:55 AM
சென்னை:இஸ்ரோவில் செயல்படுத்தப்படும், இளம் விஞ்ஞானி திட்டத்துக்கு, மாணவர்கள் விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் அறிவியல் கண்டுபிடிப்புகள் மீதான ஆர்வத்தை துாண்ட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, யுவிகா அதாவது, 'யுவ விஞ்ஞானி கார்யகிராம்' என்ற, இளம் விஞ்ஞானி திட்டத்தை செயல்படுத்துகிறது.
அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் துறைகள் மற்றும் ஆராய்ச்சி, தொழில் துறைகளில் ஆர்வம் உள்ள இளம் மாணவர்களுக்கு, வழிகாட்டும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் சேர, நாளை வரை, https://jigyasa.iirs.gov.in/yuvika என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வாளர் பட்டியல், அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டு, மே 19 முதல் 30ம் தேதி வரை பயிற்சி நடத்தப்படும்.
எட்டாம் வகுப்பில், 50 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்று, தற்போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் கண்காட்சி, வினாடி - வினா, ஒலிம்பியாட், விளையாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்ற அனுபவம் உள்ள மாணவர்களுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்.