sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஏரிகள்

/

செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஏரிகள்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஏரிகள்

செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: வேகமாக நிரம்பும் ஏரிகள்


UPDATED : நவ 30, 2024 10:32 PM

ADDED : நவ 30, 2024 02:56 PM

Google News

UPDATED : நவ 30, 2024 10:32 PM ADDED : நவ 30, 2024 02:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் மழை காரணமாக, முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், அதன் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி ஏரிகளின் நீர்மட்டம்

பூண்டி


மொத்த உயரம்: 35 அடி

மொத்த கொள்ளளவு: 3231 மில்லியன் கன அடி

தற்போதைய நீர்மட்டம்: 22.84 அடி

நீர் இருப்பு: 560 மில்லியன் கன அடி

நீர்வரத்து: வினாடிக்கு 780 கன அடி

வெளியேற்றம்: வினாடிக்கு117 கன அடி (செம்பரம்பாக்கம் ஏரிக்கு 100, குடிநீர் வடிகால் வாரியத்திற்கு 17 கன அடி)

மழையளவு: 62 மி.மீ.,

மக்களுக்கு தடை

பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் 24 மணி நேரமாக மாநில பேரிட மீட்பு குழுவினர் மற்றும் நீர்வளத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக பாதுகாப்பு கருதி பொதுமக்கள் செல்வதற்கு நீர்வளத்துறை தடை விதித்துள்ளது. ஏரி 17 சதவீதம் மட்டுமே நிரம்பி உள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு கூடுதலாக நீர் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



ரெட் ஹில்ஸ்


மொத்த உயரம்: 21.20 அடி

மொத்த கொள்ளளவு: 3300 மில்லியன் கன அடி

தற்போதைய நீர்மட்டம்: 17.10 அடி

நீர் இருப்பு: 2426 மில்லியன் கன அடி

நீர்வரத்து: வினாடிக்கு 2928 கன அடி

வெளியேற்றம்: வினாடிக்கு 197 கன அடி

மழையளவு:10.42 செ.மீ.,

சோழவரம்


மொத்த உயரம்:18.86 அடி

மொத்த கொள்ளளவு: 1081 மில்லியன் கன அடி

தற்போதைய நீர்மட்டம்:2.75 அடி

நீர் இருப்பு: 125 மில்லியன் கன அடி

நீர்வரத்து:வினாடிக்கு 140 கன அடி

வெளியேற்றம்:வினாடிக்கு 1 கன அடி

மழையளவு: 9.2 செ.மீ.,

செம்பரம்பாக்கம்


மொத்த உயரம்:24 அடி

மொத்த கொள்ளளவு:3645 மில்லியன் கன அடி

தற்போதைய நீர்மட்டம்:19.65அடி

நீர் இருப்பு: 2368 மில்லியன் கன அடி

நீர்வரத்து: வினாடிக்கு 5610 கன அடி

வெளியேற்றம்: வினாடிக்கு134 கன அடி

மழையளவு:9.02 செ.மீ.,

கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை


மொத்த உயரம்: 36.61 அடி

மொத்த கொள்ளளவு:500 மில்லியன் கன அடி

தற்போதைய நீர்மட்டம்:30.34 அடி

நீர் இருப்பு:303 மில்லியன் கன அடி

நீர்வரத்து:வினாடிக்கு30 கன அடி

வெளியேற்றம்:வினாடிக்கு 15 கன அடி

மழையளவு:1.5 செ.மீ.,

புழல் ஏரிக்கு நீர்வரத்து

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 333 மில்லியன் கன அடியாக இருந்த நீர்மட்டம் 4,364 கன அடியாக அதிகரித்து உள்ளது. மொத்தம் 3 ஆயிரம் மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 2,577 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.






      Dinamalar
      Follow us