ADDED : ஆக 14, 2025 02:53 AM
சென்னை:''நீலகிரி, கரூர், பூம்புகார் உள்ளிட்ட 20 இடங்களில், 78.59 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன,'' என, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறை ஆய்வுக் கூட்டம், நேற்று சென்னையில் உள்ள, சுற்றுலா தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
ஆண்டுதோறும் மானிய கோரிக்கையின் போது, புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்கள், சுற்றுலா துறை சார்பில் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி, 21.98 கோடி ரூபாயில், பூம்புகார் பாரம்பரிய நகரம் புதுப்பித்தல்.
கரூர் மாவட்டம் பொன்னியாறு நீர் தேக்கத்தை, 2.29 கோடி ரூபாயில், சுற்றுலா தலமாக மேம்படுத்துதல்; உதகையில் 2.85 கோடியில் சுற்றுச்சூழல் முகாம் தலம் உருவாக்குதல் உட்பட, 20 இடங்களில், 78.59 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது