தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஆக்ரா, கோவாவுக்கு சுற்றுலா ரயில்

 ஆக்ரா, கோவாவுக்கு சுற்றுலா ரயில்

 ஆக்ரா, கோவாவுக்கு சுற்றுலா ரயில்


ADDED : ஜூலை 07, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி, ஆக்ரா, ஜெய்பூர், கோவா உள்ளிட்ட இடங்களை காணும் வகையில், தமிழகத்தில் இருந்து சுற்றுலா ரயில் இயக்கப் படுகிறது.

ரயில்வேயுடன் 'டூர் டைம்ஸ்' நிறுவனம் இணைந்து, இந்த ரயிலை ஏற்பாடு செய்துள்ளது. இந்த ரயில், மதுரையில் இருந்து ஆக., 20ம் தேதி புறப்படும்.

ஆக்ராவில் தாஜ்மஹால், டில்லியில் குதுப் மினார்-, இந்தியா கேட்,- ராஜ்காட், கோவாவில் புகழ்பெற்ற சர்ச், கடற்கரைகள் மற்றும் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டை, சிட்டி பேலஸ், குஜராத் மாநிலம் ஏக்தா நகரில், சர்தார் வல்லபபாய் படேல் ஒற்றுமையின் சிலை மற்றும் அமிர்தசரஸ் பொற்கோவில், வாகா எல்லை ஆகியவற்றை காணலாம்.

மொத்தம் 11 நாட்கள் சுற்றுலா கட்டணம், 'ஸ்லீப்பர்' பெட்டியில் ஒருவருக்கு 28,750 ரூபாய், 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் 39,950 ரூபாய். மேலும் தகவல் பெற 73058 58585 மற்றும் www.Tourtimes.in இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us