சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதல்; அதிகாலை விபத்தில் 3 பேர் பலி
சுற்றுலா வேனும், காரும் நேருக்கு நேர் மோதல்; அதிகாலை விபத்தில் 3 பேர் பலி
ADDED : டிச 28, 2024 10:22 AM

தேனி: தேனி அருகே இன்று அதிகாலை சுற்றுலா வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஜெயின் தாமஸ் என்பவர் அவரது நண்பர்களுடன் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, தேனி மாவட்டம் பொம்மனம்பட்டியைச் சேர்ந்த 4 குடும்பத்தினர் ஏற்காடுக்கு வேனில் சுற்றுலா சென்றனர்.
இன்று அதிகாலை 4 மணியளவில் தேவதானப்பட்டி காட்ரோடு பகுதியில் சுற்றுலா வேனும், எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல நொறுங்கியது.
கடும் பனி மூட்டம் நிலவியதால் இந்த விபத்து நடந்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த விபத்து குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். அதில், காரில் சென்ற ஜெயின் தாமஸ் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். மேலும், வேனில் சென்ற 18 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

