தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் மணல் குவியல் திணறும் சுற்றுலா வாகனங்கள்
தனுஷ்கோடி நெடுஞ்சாலையில் மணல் குவியல் திணறும் சுற்றுலா வாகனங்கள்
ADDED : ஜூன் 04, 2025 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து கிடப்பதால் சுற்றுலா வானங்கள் சிக்கித் திணறுகின்றன.
தென்மேற்கு பருவக்காற்று சீசன் துவங்கியதால் மே 24 முதல் மன்னார் வளைகுடா கடலில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.  ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளியால்
தனுஷ்கோடியில் மணல் புயல் வீசி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மணல் குவிந்து கிடந்தது.
தற்போது தனுஷ்கோடியில் காற்றின் வேகம் தணிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் சாலையில் பரவி கிடக்கும் மணலை அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை முன்வரவில்லை. இதனால் தனுஷ்கோடி அரிச்சல்முனை செல்லும் சுற்றுலா வாகனங்கள் மணலில் சிக்கி திணறுகின்றன. மேலும் டூவீலரில் வருவோரும்  விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதில் உடனடி நடவடிக்கை அவசியம்.

