வனத்துறை தோட்டத்தில் பூத்துள்ள குளிர்கால பூக்கள் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
வனத்துறை தோட்டத்தில் பூத்துள்ள குளிர்கால பூக்கள் ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
ADDED : ஜன 01, 2024 06:32 AM

மூணாறு : மூணாறில் வனம் வளர்ச்சி கழகத்திற்குச் சொந்தமான பூந்தோட்டத்தை கடந்த பத்து நாட்களில் 27 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் சென்றனர்.
மூணாறில் மாட்டுபட்டி ரோட்டில் உள்ள கேரள வனம் வளர்ச்சி கழகத்திற்குச் சொந்தமான பூந்தோட்டம் உள்ளது.
இங்கு பால்ஷம், தும்பரிஷியா, கமேலியா, அஷிலியா, மேரிகோல்டு, டாலியா, சால்வியா, ரோஜா, ஆந்தூரியம், ஷெரேனியம், ஆர்கிட் உட்பட 600க்கும் மேற்பட்ட வகை பூக்கள் உள்ளன. அவை காலநிலைக்கு ஏற்ப பூக்கும் தன்மை கொண்டது என்பதால் ஆண்டு முழுவதும் பூந்தோட்டம் வண்ண மயமாக காட்சியளிக்கும்.
தற்போது குளிர் காலங்களில் மட்டும் பூக்கும் தும்பரிஷியா, மேரிகோல்டு, பால்ஷம், ரோஜா, பிகோனியா, சால்வியா உட்பட பல்வேறு பூக்கள் பூத்துள்ளன. அவற்றை கடந்த பத்து நாட்களில் 27 ஆயிரம் பயணிகள் ரசித்து சென்றுள்ளனர்.
காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை பூந்தோட்டத்தை ரசிக்கலாம். நுழைவு கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.50, சிறுவர்களுக்கு (5 முதல் 10 வயது வரை) ரூ.25 ஆகும்.